Homeசெய்திகள்தமிழ்நாடுநான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்

நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்

-

நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன்- அன்புமணி ராமதாஸ்

நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை, தடை செய்திருப்பேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “ஆணின் வெற்றிக்கு பின் பெண் உள்ளதாக கூறுவது சுயநலம், இருவரின் வெற்றி பின்னால் இருவரும் இருக்க வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் எனது முதல்நாள் கையெழுத்து பூரண மதுவிலக்குதான். நான் ஆட்சியில் இருந்திருந்தால் 162 வது பிரிவின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன்.

பாமக என்றால் ஜாதிக்கட்சி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது. உலக மகளிர் தினமான இன்று, தமிழக முதலமைச்சர் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது மகளிரின் ஆசை, விருப்பம், வேண்டுகோளாக இருக்கிறது. வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கிற்கு கொடுப்பதில்லை. வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எங்களிடம் அதிகாரம் இருந்திருந்தால் நிலங்களை பாதுகாத்திருப்போம். நீட் தேர்வு சமூக நீதிக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரானது” எனக் கூறினார்.

MUST READ