Homeசெய்திகள்சினிமாவெறித்தனமான லுக்கில் ஜெயம் ரவி.... போஸ்டருடன் வெளியான 'JR 34' பட  அறிவிப்பு!

வெறித்தனமான லுக்கில் ஜெயம் ரவி…. போஸ்டருடன் வெளியான ‘JR 34’ பட  அறிவிப்பு!

-

- Advertisement -

JR 34 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. வெறித்தனமான லுக்கில் ஜெயம் ரவி.... போஸ்டருடன் வெளியான 'JR 34' பட  அறிவிப்பு!அடுத்தது காதலிக்க நேரமில்லை, தனி ஒருவன் 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்ததாக தனது 34 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை இயக்கி வெற்றி கண்ட கணேஷ் கே பாபு இயக்க உள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது புதிய போஸ்டருடன் வெளியாகியுள்ளது. வெறித்தனமான லுக்கில் ஜெயம் ரவி.... போஸ்டருடன் வெளியான 'JR 34' பட  அறிவிப்பு!அந்த போஸ்டரில் ஜெயம் ரவி வெறித்தனமான லுக்கில் காட்டப்பட்டுள்ளார். மேலும் அந்த போஸ்டரை பார்க்கும்போது ஜெயம் ரவி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது போன்று தெரிகிறது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகர் ஜெயம் ரவி, ஆதி பகவன், நிமிர்ந்து நில் போன்ற படங்களை இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் கலந்த கதைகளத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ