Homeசெய்திகள்தமிழ்நாடுவேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்

வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்

-

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து கோணாங்குப்பம் வரை 10 கிலோ மீட்டர் நடை பயணம்

வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோணாங்க்குப்பம் பெரிய நாயகி மாதா கோயிலுக்கு புனித நடைபயணம் மேற்கொண்டனர்.

வேண்டுதல் நிறைவேற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நடைபயணம்உளுந்தூர்பேட்டையில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புனித பெரியநாயகி மாதா சிலை உடன் துவங்கிய இந்த நடை பயணத்தில் உளுந்தூர்பேட்டை ,எறையூர், மாரனோடை, சேர்ந்தமங்கலம், செரத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கிறிஸ்துவ பாடல்களை பாடியபடி காட்டு நெமிலி, மங்கலம்பேட்டை, கர்ணத்தம் கிராமங்கள் வழியாக சுமார் 10 கிலோமீட்டர் நடைபயணம் சென்று கோனாங்குப்பம் பெரிய நாயகி மாதாவை வழிபட்டனர்.

MUST READ