Homeசெய்திகள்வேலை வாய்ப்புஐ.டி.நிறுவனத்தில் வேலை; எவ்வளவு சம்பளம் தெரியுமா? இன்டர்வியூக்கு தயாராகுங்கள்

ஐ.டி.நிறுவனத்தில் வேலை; எவ்வளவு சம்பளம் தெரியுமா? இன்டர்வியூக்கு தயாராகுங்கள்

-

ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; எவ்வளவு சம்பளம் தெரியுமா? உடனே இன்டர்வியூவிற்கு தயாராகுங்கள்.

சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (அக்டோபர் 7 ), நாளை மறுநாள் (அக்டோபர் 8) ஆகிய 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:

சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் Catalogue Manager பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் Sourcing மற்றும் Procurement Operations Process தெரிந்திருக்க வேண்டும்

ஆங்கிலத்தில் நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும். அதோடு எம்எஸ் ஆபிஸில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். இது US Shift அடிப்படையிலான பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

MUST READ