பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது- அண்ணாமலை
பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைப்பதற்காக எவ்வளவு பெரிய சவாலையும் சந்திப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவை தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கொராசன் மாகாணத்தில் உள்ள ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. திமுக உறுப்பினர்கள் இப்போதாவது விழித்து கொண்டு தங்கள் “சிலிண்டர் குண்டுவெடிப்பு” என்கிற கோட்பாட்டை கைவிடுவார்கள் என்று நம்புகிறேன். பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது. அப்போதுதான் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க இயலும். ஜெயலலிதா அவர்கள் எப்படி முடிவு எடுப்பாரோ, அதுபோல் தான் என் முடிவும் இருக்கும் தலைவன் முடிவெடுக்கும் போது 4 பேர் வெளியேற தான் செய்வார்கள். இதில் பயம், FAVOURITISM இருக்காது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.
கூட்டணி கட்சியினருக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும், பாஜக நிர்வாகிகள் எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படக்கூடாது. பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது. அப்போது தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும், அடுத்த தலைவர்கள் உருவார்கள். யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் கட்சியில் இருப்பார்கள். இன்று பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து திராவிட கட்சிகள் வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை துணிக்க காட்டுகிறது. பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைப்பதற்காக எவ்வளவு பெரிய சவாலையும் சந்திப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.