Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து - 2 இளம்பெண்கள் பலி!

ஈரோடு அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து – 2 இளம்பெண்கள் பலி!

-

ஈரோடு அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கலைச்செல்வன் இன்று அதிகாலை தனது காரில் 2 இளம் பெண்களை அழைத்துக்கொண்டு வில்லரசம்பட்டி 4 சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது அதிவேகமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் சென்ற சௌந்தர்யா மற்றும் அவருடன் சென்ற மற்றொரு இளம்பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பலத்த காயம் அடைந்த கலைச்செல்வனை வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் 2 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ