ஆம்பூர் அருகே அதிமுக பிளக்ஸ் பேனர் அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அதிமுக மாதனூர் கிழக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுக மாநிலங்களை உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியில் அயித்தம்பட்டு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வாசு என்பவர் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, பேனர் ஒன்று எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது உரசியுள்ளது. இதில் வாசு மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமராபாத் காவல்துறையினர், வாசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.