spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வசதியான வாலிபர்களை மயக்கி பணம் பறித்து வந்த இளம்பெண் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

வசதியான வாலிபர்களை மயக்கி பணம் பறித்து வந்த இளம்பெண் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

-

- Advertisement -
kadalkanni

ஆந்திராவில் வசதியுள்ள இளைஞர்களை மடக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து வந்த பெண் கைது. அதற்கு துணையாக செயல்பட்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஷீலாநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறது. அந்த குடும்பத்தினர் சொந்த ஊரில் சில மாதங்கள் தங்கலாம் என்று விரும்பி விசாகப்பட்டினம் வந்துள்ளனர். அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த அமெரிக்கா இளைஞரை அதே பகுதியை சேர்ந்த ஜாய் ஜமீமா (28) என்ற பெண் இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகப் படுத்திக் கொண்டார். அதன் பின்னர் அந்த இளைஞரின் வீட்டு முகவரியை தெரிந்து கொண்ட ஜாய் ஜமீமா, இளைஞரின் வீட்டிற்கு சென்று பெற்றோர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

அமெரிக்கா இளைஞருடனும் அவரின் பெற்றோர்களுடனும்கொஞ்ச நாட்கள் நல்ல பெண்ணாக பேசி பழகி நடித்து வந்துள்ளார். அதன் பின்னர் உங்கள் மகனை திருமணம் செய்து வைக்கும்படி அந்த இளைஞரின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. படிப்பு மற்றும் பொருளாதார பின்னணி மனதில் வைத்து ஜாய் ஜமிமாவை நிராகரித்தனர்.

அதன் பிறகு அந்த இளைஞரும் அவனது குடும்பமும் அமெரிக்காவிற்கு மீண்டும் சென்றுவிட்டனர். ஏமாற்றம் அடைந்த ஜாய் ஜமிமா இரண்டாவது முறையாக திட்டம் போட்டு அமெரிக்காவில் இருந்த இளைஞரிடம் பேசி மீண்டும் விசாகப்பட்டினம் வரவழைத்துள்ளார்.

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய இளைஞரை நேராக ஜாய் ஜமிமாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே அந்த இளைஞருக்கு போதை பழக்கங்களுக்கு பழகியுள்ளார்.
போதை மருந்து கலந்த குளிர் பானங்களைக் கொடுத்து, இளைஞர் மயக்க நிலையில் இருக்கும் போது அவருடன் ஆடையில்லாமல் நிர்வாணப்படம் எடுத்துக் கொண்டாள்.

பின்னர் அந்த படங்களையும், வீடியோக்களையும்காட்டி அந்த இளைஞனை மிரட்டி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.அந்த இளைஞர் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதை ஏற்காமல் சில ரௌடிகளை வைத்துக்கொண்டு
மிரட்டி திருமணத்திற்கு பணிய வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஒரு நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் செய்ய வேண்டும் என்று கூறி அந்த இளைஞரிடம் ₹.5 லட்சம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். அதன் பின்னர் அந்த இளைஞரின் செல்போனை பிளாக் செய்து அவர்கள் நிச்சயதார்த்தம் மற்றும் நெருக்கமான புகைப்படங்களைக் காண்பித்து அந்த இளைஞரை அவளது வீட்டில் அடைத்து வைத்திருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இந்த புகைப்படங்களை வைத்து போலீசில் வழக்கு பதிவு செய்து, சிறைக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த இளைஞர் தன்னிடம் இருந்த பணத்தை முழுவதையும் கொடுத்துள்ளார். இருப்பினும் ஜாய் ஜமிமா வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றபோது ரௌடி களின் உதவியுடன் ஜமிமா கத்தியால் குத்தி மிரட்டி உள்ளார். என்னை திருமணம் செய்துகொள்ளா விட்டால் கொலை செய்து விடுவதாகவும் அவரது ரௌடி நண்பர்கள் மூலம் மிரட்டியுள்ளார்.
இறுதியாக கடந்த 4 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளைஞர் ஜமிமாவிடம் இருந்து தப்பித்து சென்று பீமிலி காவல்நிலையத்தில் அழுதுள்ளார். நடந்ததை புகாராக அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ஜமிமாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப், டேப், மூன்று போன்கள் மற்றும் விலை உயர்ந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஜமிமாவும் அவரது ரௌடி நண்பர்களும் பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் என்ற பெயரில் சிக்க வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜமிமாவின் ரௌடி நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

இந்த வழக்கு தொடர்பாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் கூறுகையில் ஜமிமா பின்னணியில் பெரிய கும்பல் இருப்பதாகவும் , ஜமீமாவுக்கு இந்த கும்பல்தான் பயிற்சி அளித்து எப்படி இளைஞர்களை ஈர்ப்பது ? யாரை சிக்க வைக்க வேண்டும்? போதைமருந்தை எப்படி கொடுப்பது? வீடியோ எடுத்து மிரட்டுவது எப்படி? இவை அனைத்தும் அவளுக்கு பயிற்சி வழங்கி உள்ளனர். அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று விசாகப்பட்டினம் காவல் ஆணையர் பாக்சி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு இளைஞர் இதேபோன்று ஜமிமா வளையில் விழுந்து பணத்தை இழந்ததாக தற்போது புகார் அளித்துள்ளார். எனவே ஜமிமா வளையில் சிக்கியவர்கள் தைரியமாக புகார் அளிக்குபடி காவல் ஆணையர் கேட்டு கொண்டுள்ளார்.

MUST READ