பாகுபலி பட பிரபலம், கங்குவா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்காக ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் கலந்து கொள்ளப் போவதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.