மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என்று அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சொத்து வரி உயர்வு பேருந்து கட்டண உயர்வு மின்சார கட்டண உயர்வு அத்யாவசிய பொருட்கள் உயர்வை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி நான்காவது மண்டலம் அருகே மணிதசங்கலி போராட்டம் நடைபெற்றது.
தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர்.
குதிரையில் அமர்ந்தவாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் ஜான்சன் துரை குதிரை மீது வந்து மக்களிடம் வரி கேட்பதைப் போன்று அதிமுகவினர் நாடகத்தை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்கத்தையும் தக்காளியும் கையில் வைத்து அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் தங்கத்தை கூட வாங்கி விடலாம் தக்காளியை வாங்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளதை எடுத்துரைத்தனர். அனைவருக்கும் தக்காளியை வழங்கி தக்காளியை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து வீட்டு வரி உயர்வினால் வரி கட்ட முடியவில்லை. அதற்கு மாறாக சொத்து பத்திரங்களை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல உதவி ஆணையரிடம் வழங்கி சொத்து வரி உயர்வை குறைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதிமுகவினர் தூக்கத்தில் இருந்து திடீரென விழித்தவர்களை போன்று தற்போது மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக பொது மக்கள் பேசிக்கொண்டனர்.