Homeசெய்திகள்தமிழ்நாடுசென்ட்ரலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்... மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

சென்ட்ரலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்… மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

-

- Advertisement -

சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் படுகாயமடைந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், மாநில கல்லூரியை சேர்ந்த சுந்தர் என்ற மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து, அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவர் சுந்தர் உயிரிழந்தார்.

மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 6 பேரை காவல் துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், சென்னையில் முக்கிய ரயில் வழித்தடங்கள், பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ