- Advertisement -
ராஜஸ்தானில் வினோத ஹோலி கொண்டாட்டம்
ராஜஸ்தானில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொள்ளும் வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி ஹோலி வாழ்த்தை பரிமாறினர்
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை என்றாலே, வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி வாழ்த்துகளை பரிமாறுவதே வழக்கம். ஆனால் சில இடங்களில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்ளும் ஹோலியும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் அருகேயுள்ள பிலுடா கிராமத்தில் அந்த வினோத ஹோலி கொண்டாடப்பட்டது. ஊரின் மையப் பகுதியில் திரண்ட இளைஞர்கள், ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களால் தாக்கிக் கொண்டு ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
கற்களால் தாக்கிக் கொண்டதால் 30-க்கும் மேற்பட்டோர் காயம்
இந்த வினோத ஹோலி கொண்டாட்டத்தை ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. கல் எறியும் ஹோலியில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.