Homeசெய்திகள்க்ரைம்43 மாணவிகள் பாலியல் புகார் - போலீஸ் பிடியில் கணக்கு வாத்தி

43 மாணவிகள் பாலியல் புகார் – போலீஸ் பிடியில் கணக்கு வாத்தி

-

- Advertisement -

 43 மாணவிகள் பாலியல் புகார் - போலீஸ் பிடியில் கணக்கு வாத்தி 43 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். போலீஸ் பிடியில் சிக்கிய கணக்கு வாத்தியார்

தஞ்சை மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் 43 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

மாணவிகள் எழுத்து முலம் அளித்த புகாரின் பேரில் கணித ஆசிரியர் முத்துக்குமரன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் ஆசிரியரிடம் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
முத்துக்குமரன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சைல்ட் லைன்  அமைப்பிற்கு தொலைபேசி மூலம் தகவல் வந்திருக்கிறது.

இதன் அடிப்படையில் சைல்ட் லைன் அமைப்பினர் பள்ளிக்கு சென்று ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வரும் 43 மாணவிகளிடம் தனித் தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு மாணவியிடமும் தனித் தனியாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சீட்டில் எழுதி தர சொல்லி வாங்கி உள்ளனர்.

அதில் மாணவிகள் எழுதி கொடுத்தது ஒரே மாதிரியாக இருந்ததை அடுத்து, கணித ஆசிரியர் முத்துக்குமரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உறுதி செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அறிக்கை தயார் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கியுள்ளனர்.

 43 மாணவிகள் பாலியல் புகார் - போலீஸ் பிடியில் கணக்கு வாத்தி

சைல்ட்லைன் அமைப்பினரின் அறிக்கையின் அடிப்படையில் கணித ஆசிரியர் முத்துக்குமரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சைல்ட் லைன் அமைப்பினர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் கணித ஆசிரியர் முத்துக்குமரன் மீது புகார் அளித்தனர்.

இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி

புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கணித ஆசிரியர் முத்துக்குமரனை பிடித்து வந்து தனி இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ