பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால் ஸ்ரீபார்வதீஸ்வர கோவில் நில மோசடி வழக்கில்
சப் கலெக்டர் ஜான்சனை மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடத்தினர் .
அதன்பிறகு அவரது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர்.கோயில் நிலம் மோசடியில் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் முக்கிய குற்றவாளியாக துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஆளுங்கட்சி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்டத் துணை ஆட்சியர் ஜான்சன் கைது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.