ஜெயம் ரவி பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம் இவர் காதலிக்க நேரமில்லை, ஜீனி, தனி ஒருவன் 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் தனது 34 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் ஜெயம் ரவி. இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெயம், மேலும் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2, அருண் விஜயின் ரெட்ட தல, வைபவின் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரிக்கும் பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்.
BTG Goes Big! 🔥
We are thrilled to announce an exciting new partnership with the versatile Jayam Ravi for two massive projects! 🎬
From the makers of #demontecolony2 #chennaicitygangsters & #rettathala , get ready for two more cinematic spectacle brought to you by BTGUniversal… pic.twitter.com/n484IZ0nLc
— BTG Universal (@BTGUniversal) October 11, 2024
இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்த நிலையில் தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.