Homeசெய்திகள்க்ரைம்ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

-

ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி ரெயில்களில் கடத்தப்படுவதாக வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது காட்பாடி ரெயில் நிலையத்தில் லால்பாக் விரைவு ரெயில் வண்டியின் பயணிகள் இருக்கைக்கு அடியில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பறக்கும் படை தனி வட்டாட்சியர் விநாயகமூர்த்தி மற்றும் குழுவினர் இணைந்து 2 டன் எடையுள்ள 40 மூட்டைகள் அரிசியை பறிமுதல் செய்தனர். இதனை திருவலம் கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

MUST READ