Homeசெய்திகள்இந்தியாகவரப்பேட்டை ரயில் விபத்து; ஓட்டுநர்களிடம் விசாரணை - ஏதாவது சதித்திட்டம் உள்ளதா?

கவரப்பேட்டை ரயில் விபத்து; ஓட்டுநர்களிடம் விசாரணை – ஏதாவது சதித்திட்டம் உள்ளதா?

-

பாக்மதி எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் சுப்பிரமணி, உதவி லோகோ பைலட் ராம் அவதார் மீனா ஆகியோரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - ராகுல் காந்தி

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று இரவு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. உயிர் சேதம் எதுவு நடைபெறவில்லை.

இந்நிலையில்
ரயில்வே ஏ.டி.ஜி.பி. ஜெயராம், டிஐஜி அபிஷேக் தீக்‌ஷீத், எஸ்.பி.ஈஸ்வரன் மேற்பார்வையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர்கள் பைலட் சுப்பிரமணி, உதவி பைலட் ராம் அவதார் மீனா ஆகியாரிடம்
விசாரணை நடைபெறுகிறது.

ஏதாகிலும் சதி செயல் இருக்கிறதா என்பதை அறிய
எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ், சென்ட்ரல் டிஎஸ்பி கர்ணன், சேலம் டிஎஸ்பி பெரியசாமி ஆகிய 3 பேர் தலைமையிலான காவல் குழுவினர் கவரப்பேட்டை பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்..

MUST READ