பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் எல்ஐகே திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படமானது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், டிராகன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். பிரதீப் ராகவ் இதன் எடிட்டிங் பணிகளை கவனிக்க நிகேத் பொம்மி இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (அக்டோபர் 12) காலை வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் பிரதீப் ரங்கநாதன் லோக்கலான லுக்கில் காண்பிக்கப்பட்டார். அடுத்தது இந்த படத்தின் ஃபயரான இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியாகும் அடுத்தடுத்த போஸ்டர்களை பார்க்கும்போது கல்லூரி வாழ்க்கை தொடர்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.