Homeசெய்திகள்மாவட்டம்கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு

-

- Advertisement -

கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாச்சியார் கோவில் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் பக்கமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த செயினை பறித்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரட்டிச் சென்றதில் பயந்துபோன ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியதில் ஒருவன் மட்டும் பொது மக்களிடம் சிக்கிக் கொண்டான். அவனுக்கு தர்ம அடி கொடுத்த மக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் பெயர் சமீர் என்பது தெரியிவந்தது. மேலும் தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருடர்கள் கண்காணிப்பு இல்லாத இடங்களாக பார்த்து தங்கள் கைவரிசையை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

MUST READ