இயக்குனர் லோகேஷ் கனகராஜ், லியோ-2 படம் குறித்து பேசி உள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த படத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் படத்தில் இடம்பெற்ற நரபலி சம்பந்தமான காட்சிகள் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழுவினர் சார்பில் லியோ பட பிளாஷ்பேக் காட்சிகள் உண்மையானது இல்லை எனவும் அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கிட்டத்தட்ட 627 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் எல்சியு வின் கீழ் அடங்கும். எனவே லியோ 2 திரைப்படத்தை இயக்க லோகேஷ் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். ஆனால் விஜய் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்திருந்த நிலையில் லியோ 2 திரைப்படத்தில் விஜய் நடிப்பாரா? அல்லது லியோ 2 திரைப்படம் அப்படியே கைவிடப்படுமா? என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லியோ 2 திரைப்படத்தை தான் இயக்க விரும்புவதாகவும் அப்படி இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்திற்கு பார்த்திபன் என்று தலைப்பு வைப்பேன் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் விஜயின் தனிப்பட்ட முடிவில் தான் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளார்.