- Advertisement -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 20 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. இதில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது