Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் ரம்மி தடை மசோதா- திருப்பிய அனுப்பிய ஆளுநர்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா- திருப்பிய அனுப்பிய ஆளுநர்

-

- Advertisement -

ஆன்லைன் ரம்மி தடை மசோதா- திருப்பிய அனுப்பிய ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலையும் பெறுவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி ஆளுநர் ஒப்புதல் பெற அனுப்பியது.

இந்த அவசரச் சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதியன்று நடந்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்தபோது அந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஒப்புதல் தராமல் தாமதப்படுத்துவதாக கருதிய நிலையில் நேரில் ஆளுநரை சந்திக்கவும் அரசு தரப்பில் நேரம் கேட்கப்பட்டது.

இந்த சூழலில் நவம்பர் 24 ம் தேதி ஆளுநர் தரப்பில் இருந்து சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பட்டது. தமிழ்நாடு அரசும் 25 ம் தேதி அதாவது 24 மணி நேரத்திற்குள் விளக்கமும் அளித்தது. ஆனாலும், மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் தாமதப்படுத்தியதோடு, ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் தமிழ்நாடு அரசு பேரவையில் நிறைவேற்றிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

MUST READ