Homeசெய்திகள்சினிமாமக்கள் பயனுக்காக ஏஐ படிக்க சென்ற கமல்ஹாசன்!

மக்கள் பயனுக்காக ஏஐ படிக்க சென்ற கமல்ஹாசன்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருகிறார். கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார் கமல்ஹாசன். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மக்கள் பயனுக்காக ஏஐ படிக்க சென்ற கமல்ஹாசன்!இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 3 திரைப்படமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. மேலும் கமல்ஹாசன், சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு 69 வயதிலும் திரைத்துறையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கமல்ஹாசன், ஒரு அரசியல்வாதி என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராக வலம் வரும் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவுடன் கூட்டணி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் ஏஐ தொழில்நுட்பம் படிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் எதற்காக ஏஐ தொழில்நுட்பம் படிக்க சென்றுள்ளார்? என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில் கடந்த 1997 இல் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட மருதநாயகம் திரைப்படத்தை மீண்டும் இயக்குவதற்காக தான், கமல்ஹாசன் ஏஐ படிக்க சென்றுள்ளார் என்று தகவல் வெளியானது. மக்கள் பயனுக்காக ஏஐ படிக்க சென்ற கமல்ஹாசன்!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கமல்ஹாசன், தமிழக அரசுடன் இணைந்து ஏஐ தொழில் நுட்பத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. எனவே கமல்ஹாசனின் இந்த திட்டம், கல்வி முறையில் மாணவர்களுக்கு பயனளிக்கப் போகிறதா? அல்லது பொது மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனளிக்கப் போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

MUST READ