அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் 21வது படமான இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக சொல்லப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக, மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர் மற்றும் ஹே மின்னலே எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனின் மேடைப் பேச்சைக் கேட்க மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.