Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலர்!

நாளை வெளியாகும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் டிரைலர்!

-

- Advertisement -

ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.நாளை வெளியாகும் 'ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலர்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் நடிப்பில் கடைசியாக ஸ்டார் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து கவின் மாஸ்க் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தனது பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார்.நாளை வெளியாகும் 'ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலர்! மேலும் நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார். சுஜித் சாரங் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். நடிகர் கவின் இந்த படத்தில் யாசகராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 31 அன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. நாளை வெளியாகும் 'ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலர்!இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 18 ஆம் தேதி) வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ