தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருமழை காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டது. மேலும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனால் கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்னரே மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ தேதி நெருங்கிய 2388 கர்ப்பிணித் தாய்மார்கள் 15.10.2024 தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் 16.10.2024 அன்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டனர்.15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டிருந்த 3844 கர்பினி தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து மழை காலமாக இருப்பதால் மழை நீர் தேங்கும் இடங்களில், போக்குவரத்து பாதிப்பாகும் இடங்களில் உள்ள கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்பே அனுமதிக்க வேண்டும் என்றும் கடைசி நேர காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து சுகாதார மையங்களிலும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.