Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதிப்பு

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதிப்பு

-

புதுச்சேரி மாநிலத்தில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது, அம்மாநில கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயம் மற்றும் கள்ளு விற்பனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில்  83 சாராயக் கடைகளும், காரைக்காலில் 26 சாராயக் கடைகளும் என மொத்தம் 109 சாராயக் கடைகள் உள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  அம்மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தடை விதித்து உத்தரவிட்டது.

puducherry

இதன் காரணமாக பாக்கெட்டில் சாராயம் விற்க தடை விதிக்கப்பட்டது. எனினும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் சாராயக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர், மீண்டும் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய அனுக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில், அதனை ஏற்று மீண்டும் பாக்கெட் சாராயம் விற்க கலால்துறை அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அண்மையில் புதுச்சேரி அறிவில் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் கலால்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் பிளாஸ்டிக் தடையை கடை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அதனை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து, அம்மாநில கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

MUST READ