சசிகுமார் நடிக்கும் ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அயோத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் வெளியான கருடன் திரைப்படமும் இவருக்கு நல்ல வெற்றியை தந்தது. மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் நந்தன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சசிகுமார் நடிப்பில் ப்ரீடம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை சத்ய சிவா எழுதி இயக்க விஜய கணபதி பிச்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. ஜிப்ரானின் இசையிலும் உதயகுமாரின் ஒளிப்பதிவியிலும் இந்த படம் உருவாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அதன்படி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸாக தயாராகி வரும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.