Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'பிரதர்' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

-

- Advertisement -
kadalkanni

ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.ஜெயம் ரவியின் 'பிரதர்' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு! இது தொடர்பாக ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நட்டி நடராஜ், சீதா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தினை எம். ராஜேஷ் இயக்கியிருக்கிறார். அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான மக்காமிஷி எனும் பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. அதைத்தொடர்ந்து வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயம் ரவியின் 'பிரதர்' படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!இந்நிலையில் ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு, தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களைப் போல் பிரதர் திரைப்படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ