Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனை பாராட்டிய அஜித்..... விஜயின் அன்பு தான் ஸ்பெஷல்னு சொன்ன சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனை பாராட்டிய அஜித்….. விஜயின் அன்பு தான் ஸ்பெஷல்னு சொன்ன சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அமரன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. சிவகார்த்திகேயனை பாராட்டிய அஜித்..... விஜயின் அன்பு தான் ஸ்பெஷல்னு சொன்ன சிவகார்த்திகேயன்!ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படமானது வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தினை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 18) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் அஜித் குறித்து பேசி இருக்கிறார்.சிவகார்த்திகேயனை பாராட்டிய அஜித்..... விஜயின் அன்பு தான் ஸ்பெஷல்னு சொன்ன சிவகார்த்திகேயன்! அதாவது, “தீபாவளி கெட் டு கெதர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது கதவை திறந்ததும் அஜித் சார் இருந்தார். அவர் என்னை பார்த்து ‘வெல்கம் டு பிக் லீக்’ சிவா என்று சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அஜித் சார், உங்களின் வளர்ச்சியை பார்த்து பிறர் பயப்படுகிறார்கள் என்றால் நீங்கள் பிக் லீக்கில் இருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்” என அஜித் சொன்னதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.சிவகார்த்திகேயனை பாராட்டிய அஜித்..... விஜயின் அன்பு தான் ஸ்பெஷல்னு சொன்ன சிவகார்த்திகேயன்!

அஜித் குறித்து சிவகார்த்திகேயன் பேசியதை கேட்டதும் அரங்கமே ஆரவாரம் செய்தது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம், விஜய் கொடுத்த பரிசுகளில் எது ரொம்ப ஸ்பெஷல்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. சிவகார்த்திகேயன் மிகவும் அழகாக, “தளபதி கொடுத்த அன்பு தான் ஸ்பெஷல்” என்று கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ