spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகை எதிரொலி.... சிவகாசியில் பட்டாசு வாங்க குவிந்த வெளி மாவட்ட மக்கள்

தீபாவளி பண்டிகை எதிரொலி…. சிவகாசியில் பட்டாசு வாங்க குவிந்த வெளி மாவட்ட மக்கள்

-

- Advertisement -
kadalkanni

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் சிவகாசியில் பட்டாசுகளை வாங்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.

இன்று விடுமுறையை ஒட்டி சென்னை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்துடன் சிவகாசிக்கு வந்து மலிவான விலையில் பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

தங்கள் பகுதிகளில் ஒப்பிடும்போது சிவகாசியில் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் கிடைப்பதாலும், பல்வேறு வகையான பட்டாசுகளை நேரில் பார்த்து வாங்க முடியும் என்பதாலும் சிவகாசியில் நேரடியாக வந்து பட்டாசு வாங்கிச்செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

MUST READ