Homeசெய்திகள்உலகம்11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு

11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு

-

- Advertisement -

11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு

இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.

கஞ்சா செடிகளை வேறொடு பிடுங்கி அழித்த போலீசார்

இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திராவின் ஆச்சே என்ற பகுதியில், சட்டவிரோதமாக மரிஜூவானா எனப்படும் கஞ்சா செடிகள் விளைவிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்றபோது, சுமார் 11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பது தெரியவந்த்து. இதையடுத்து அவற்றை வேறோடு பிடுங்கிய போலீசார், கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர்.

மரிஜூவானா எனப்படும் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதால் அதிர்ச்சி

உலகிலேயே மிக கடுமையாக போதைப்பொருள் தடுப்புச் சட்டங்கள் அமலில் உள்ள இந்தோனேசியாவில், 11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள் விளைவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

MUST READ