Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்களது முகம் நிலா போல் மின்ன கோகோ பவுடர் பயன்படுத்துங்கள்!

உங்களது முகம் நிலா போல் மின்ன கோகோ பவுடர் பயன்படுத்துங்கள்!

-

அன்று முதல் இன்று வரை மனிதர்களின் நிறம் என்பது எல்லா இடங்களிலுமே பேசக்கூடிய விஷயமாக தான் இருக்கிறது. பொதுவாக ஒரு மாப்பிள்ளைக்கு பெண் தேடினாலும், ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடினாலும் அவர்கள் சிவப்பாக இருக்கிறார்களா? கருப்பாக இருக்கிறார்களா? என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கிறது. இதனால் பலரும் நாம் சிவப்பாக இருக்க வேண்டும். நம் முகம் பளபளப்பாக மின்ன வேண்டும் என எண்ணுவதுண்டு. கருப்பு நிறத்தை கிண்டலடிக்கும் ஆட்கள் இன்றும் இருக்கிறார்கள்.
உங்களது முகம் நிலா போல் மின்ன கோகோ பவுடர் பயன்படுத்துங்கள்!அதனால்தான் மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். இது தற்காலிகமாக நல்ல பலன் அளித்தாலும் பிற்காலத்தில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே வீட்டிலேயே இயற்கையான முறையில் சில வழிகளை பின்பற்றி உங்கள் முகத்தை பிரகாசமாக்குங்கள்.

அதற்கு முதலில் கோகோ பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கோகோ பவுடரில் இரண்டு ஸ்பூன் அளவு முல்தானி மிட்டியை சேர்த்து கலக்க வேண்டும். அத்துடன் நான்கு சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதாவது முகத்தில் உள்ள பருக்கள் போன்றவை மறைந்து முகம் பளபளப்பாக மாறும்.உங்களது முகம் நிலா போல் மின்ன கோகோ பவுடர் பயன்படுத்துங்கள்!

இதேபோல் லவங்கப்பட்டையை பொடி செய்து அதனை கோகோ பவுடருடன் சேர்த்து கலக்க வேண்டும். அடுத்தது அதில் இரண்டு ஸ்பூன் அளவு தேன் கலந்து முகத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவி வர உங்களது சருமம் மென்மையாக மாறும்.

மூன்றாவதாக, ஒரு ஸ்பூன் அளவு கோகோ பவுடரும் ஒரு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லும் எடுத்து அதனை பேஸ்ட் போன்ற கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வரவேண்டும். இவ்வாறு செய்வதனால் உங்கள் முகம் பளபளப்பாக மாறும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.உங்களது முகம் நிலா போல் மின்ன கோகோ பவுடர் பயன்படுத்துங்கள்!

இருப்பினும் இதனால் ஏதேனும் உங்களுக்கு தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ