- Advertisement -
2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?
கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசியா அருகே கடல் பகுதியில் பறந்த சென்றபோது மாயமான விமானத்தில் இருந்த 239 பேரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது
239 பேரின் கதி இதுவரை தெரியாமல் உள்ளதால் தொடரும் துக்கம்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற போது, 2014 மார்ச் மாதம் 8 ஆம் தேதி விமானம் மாயமானது. இந்த விமானத்தை கண்டுபிடிக்க உலக நாடுகளின் வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி செய்தும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஜனவரி 2015 ஆம் ஆண்டு விமான ஊழியர்கள் 12 பேர் மற்றும் 227 பயணிகள் உயிரிழந்ததாக மலேசிய அரசு அறிவித்தது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சொந்தங்களை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் துக்கம் பகிர்ந்து வருகின்றனர். இந்த விமானத்தை தொடர்பு இல்லாமல் ஆக்கி, விமான பைலட்டே கடலில் மூழ்கடித்து இருக்கலாம் என்ற சந்தேகமும் நீடித்து வருகிறது.