HomeBreaking News‘கொடூரர்களின் அடுத்த டார்கெட் ராகுல் காந்திதான்...’சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

‘கொடூரர்களின் அடுத்த டார்கெட் ராகுல் காந்திதான்…’சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

-

கேங்கஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி மற்றும் அசாதுதீன் ஒவைசி என்று ஒடியா நடிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது பெரும் பரபாப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடியா மொழி திரைப்பட நடிகர் புத்ததித்யா மொகந்தி என்பவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் குறித்து சமூக வலைதளத்தில் சமீபத்தில் பதிவிட்டு அரசியல் சர்ச்சையை கிளப்பினார். மொஹந்தி தனது சர்ச்சைக்குரிய பதிவில், ‘பிஷ்னோயின் அடுத்த இலக்குகள் ராகுல் காந்தி, மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசியாக இருக்கலாம்’ என்று கூறிய அவர், மேலும், “ஜெர்மனியில் கெஸ்டபோ இருந்தது. இஸ்ரேலுக்கு மொசாட் உள்ளது… அமெரிக்காவில் சிஐஏ உள்ளது… இப்போது இந்தியாவில் லாரன்ஸ் பிஷ்னோய் இருக்கிறார். பட்டியலில் அடுத்ததாக ஓவைசி மற்றும் ராகுல் காந்தி இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!

மொஹந்தியின் இந்தப் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் மொகந்தி மீது காவல்துறையில் புகார் அளித்தார். “என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்ட பிறகு, கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயின் அடுத்த இலக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். எங்கள் தலைவருக்கு எதிராக இதுபோன்ற கருத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் பிரதான் எச்சரிக்கை விடுத்தார். இதனால் மொஹந்தியின் சர்ச்சைக்குரிய அந்த நீக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, மொகந்தி சமூக ஊடகங்களில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ‘‘ராகுல் காந்தியை எந்த வகையிலும் இழிவுபடுத்துவது எனது நோக்கம் அல்ல. ராகுல் காந்தியைப் பற்றிய எனது கடைசி இடுகை. மன்னிக்கவும்.. ”என்று அவர் கேட்டுக் கொண்டார்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், என்சிபி தலைவரும், மூன்று முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்த பாபா சித்திக், பாந்த்ராவில் ஆயுதமேந்திய மூன்று ஆசாமிகளால் சுடப்பட்டார். சித்திக் மூன்று தோட்டாக் காயங்களால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அக்டோபர் 12 அன்று இறந்தார்."சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

ஒரு சமூக ஊடக பதிவில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சித்திக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. டான் தாவூத் இப்ராகிமுடனான தொடர்பு மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுடனான நெருங்கிய உறவுக்காக சித்திக் குறிவைத்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் கூறி இருந்தார்.

முன்னதாக மகாராஷ்டிரா அரசியல் தலைவரும், நண்பருமான பாபா சித்திக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து, தனது பாதுகாப்புக்காக ரூ.2 கோடி மதிப்பிலான புல்லட் புரூப் காரை சல்மான் கான் வாங்கியுள்ளார்.

MUST READ