Homeசெய்திகள்பிரசவ அறையில் Vlog..? வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..!

பிரசவ அறையில் Vlog..? வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..!

-

மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி குழந்தை பிறந்தது. அறுவை அரங்கில் இருந்த போது மனைவிக்கு தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது போன்று வீடியோ வெளியிட்டிருந்தார். மருத்துவ விதிகளின்படி குற்றம் என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புகார் அடிப்படையில் சோழிங்கநலூரில் உள்ள டிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபரான இர்பான் வெவ்வேறு உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை கொண்டுள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் ஹசீஃபா – இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக இர்பான் துபாய்க்கு மனைவி ஹசீஃபாவை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டார். அதனை தன் நண்பர்களுடன் இணைந்து இதை கொண்டாடினார்.

அந்த வீடியோவையும் அவர் தனது யூட்யூப் சேனலில் பதிவிட்டார். அப்போதும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, இர்பானிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பியது. உடனடியாக சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன், இச்செயலுக்காக மன்னிப்பு கோரினார் இர்பான். இந்நிலையில் அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான்.

‘‘தனது குழந்தையின் தொப்புள் கொடி வெட்டுவது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள இர்ஃபான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். மருத்துவமனை, மற்றும் மருத்துவர்களிடமும் விளக்கம் கேட்கப்படும்’’என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொப்புள்கொடியை வெட்டுவதை போன்று வீடியோ: இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை நீக்கக்கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

MUST READ