Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் 'மெய்யழகன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘மெய்யழகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

-

- Advertisement -

மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'மெய்யழகன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

கார்த்தி நடிப்பில் உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. கார்த்தியின் 27ஆவது படமான இந்த படத்தினை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருந்தார். இதனை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க கோவிந்த் வசந்தா இதற்கு இசையமைத்திருந்தார். மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா ஆகியோரும் படத்தில் நடித்திருந்தனர். எமோஷனல் கலந்த குடும்பப் பொழுதுபோக்கு படமாக வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.மிகவும் எதிர்பார்க்கப்படும் 'மெய்யழகன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு! இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி மெய்யழகன் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் மெய்யழகன் திரைப்படம் ஓடிடியிலும் பேராதரவை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ