Homeசெய்திகள்OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்... டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

OYO -வாக மாற்றி கார்களுக்குள் ரொமான்ஸ்… டிரைவர்கள் போட்ட 6 விதிமுறைகள்

-

நீங்கள் ரொமான்ஸ் செய்ய இது OYO அல்ல என காரில் ரொமான்ஸ் செய்வதால் கோபம் கொண்டுள்ள டிரைவர்கள் பயணிகளுக்கு 6 கட்டளைகளை பிறப்பித்துள்ளது வைரலாகி வருகிறது.

இன்று காதலர்களுக்கு கிடைத்த பெரிய வரம் ஓயோ. முந்தைய தலைமுறைக்கு கிட்டிராத பாக்கியம். முந்தைய தலைமுறை ஒரு தனி அறைக்காக பட்ட பாடுகள் அலைந்து அலைச்சல்கள் பட்ட காயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வெளியூர் அட்ரஸ் ப்ரூஃப் கேட்பார்கள். ரிசப்ஷனில் அவமானப்படுத்துவார்கள், ரூம் தரமறுப்பார்கள், மோசமான அறைகளை ஒதுக்குவார்கள் என ஒரே கெட்ட அனுபவங்கள்தான்.

இன்று அப்படியல்ல. ஆன்லைனில் புக் பண்ணிவிட்டு ரிசப்ஷன் ஆளைக்கூட சந்திக்காமல் ரூமுக்குள் போய்விடலாம். முழு நாள் புக் பண்ணி செலவு பண்ண காசில்லை எனில் அரைநாள் கூட அறை எடுக்கலாம். இரவு வீட்டுக்கு போக வேண்டுமா பகலில் மட்டும் கூட அறை எடுக்கலாம். டிஸ்கவுன்ட் தருகிறார்கள். வீக்டேஸ் ஆஃபர் உண்டு.

இந்த ஓயோக்காரரும் இந்த காதலர்களை நம்பிதான் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற பாடாவதி லாட்ஜ்களை எல்லாம் லீசுக்கு எடுத்து கலர்கலராக பெயின்ட் அடித்து டவுன்ஹவுஸ், ஸ்பாட்ஆன்,கேபிடல் ஓ… என்று விதவிதமாகப் பேர்போட்டு காசுபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் மட்டும் இல்லாமல் போனால் ஓயோவுக்குதான் பேரிழப்பாக இருக்கும். ஓயோவில் ரூம் போட்டு செய்யும் அதே ரொமான்ஸை வாடகைக் கார்களில் பயனிக்கும் சிலர் செய்வதால் முகம் சுளித்துக் கொள்கிறார்கள் கார் டிரைவர்கள்.

car driver

இந்த ரொமான்ஸை தடுக்க அடுத்த அதிரடியில் இறங்கி விட்டார்கள் கார் டிரைவர்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு கேப் டிரைவர், தனது காரில் ஏறுபவர்களை ஆசாரத்துடன் உட்காருமாறு அறிவுறுத்தி இருக்கையின் மீது போஸ்டரை வைத்துள்ளார். இந்த வண்டியில் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின் இருக்கையில் ரொமான்ஸ் செய்வதை நகைச்சுவையாக தடை செய்துள்ளார்.

ஓட்டுநர் தனது பயணிகளுக்கு “இது ஒரு வண்டி, OYO அல்ல” என்று நினைவுபடுத்தியுள்ளார். இணையதளம் மூலம் ஓயோ ரூம்ஸ் இப்போது பெரும் லாபம் சம்பாதிக்கும் பிஸினஸாக உருவாக்கியுள்ளது. ஓயோ டீமுக்கு இது தான் வருமானத்தின் ஆதாரமாக இருக்கிறது. ஓயோவில் ரூம் போட்டு செய்யும் ரொமான்ஸ்களுக்கு கொஞ்சமும் விதிவிலக்கின்றி கால்டாக்ஸிகளுலும் அந்த கலாச்சாரத்தை அரங்கேற்றுவதால் பெங்களூரு வண்டி ஓட்டுநர்கள் தங்கள் பயணிகளுக்கான 6 விதிகளை ஒட்டி வருகின்றனர். பெங்களூரு வண்டி ஓட்டுநர் ஒருவர், காரில் பயணிக்கும்போது பயணிகள் பின்பற்ற வேண்டிய ஆறு விதிகளைப் பட்டியலிட்டுள்ளார்.

ஓட்டுநரை “பய்யா” என்று அழைக்கக்கூடாது. மெதுவாக கதவை மூடுவதும், பயணம் முழுவதும் கண்ணியமான நடத்தையைப் பேணுவதும் முக்கியம். நீங்கள் வண்டியின் உரிமையாளர் அல்ல. வண்டியை ஓட்டுபவர் வண்டியின் உரிமையாளர். பணிவாகப் பேசுங்கள், மரியாதையுடன் பேசுங்கள். கதவு மெதுவாக மூடு. உங்கள் அணுகுமுறையை உங்கள் பாக்கெட்டில் வைத்திருங்கள், தயவுசெய்து அதை எங்களிடம் காட்ட வேண்டாம், ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு அதிக பணம் கொடுக்கவில்லை. எங்களை பையா என்று அழைக்க வேண்டாம்’’ எனக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

நியாயம்தானே..!

MUST READ