Homeசெய்திகள்க்ரைம்35 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னரை தூக்கிய கும்பல்; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு

35 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னரை தூக்கிய கும்பல்; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு

-

சென்னை துறைமுகத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கை சினிமா பாணியில் கடத்திய கும்பலை போலீசார் கண்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துறைமுகத்தில் சி.ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கண்டெய்னர் ஒன்று காணவில்லை என்றும் அதில்
ரூ.35 கோடி ரூபாய் மதிப்பிலான டெல் நிறுவன லேப்டாப் பெட்டிகள் இருந்ததாக புகாரில் தெரிவித்திருந்தனர். ரூ 35 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கை, அதிக பாதுகாப்புடன் இருக்கும் இடத்தில் இருந்து கடத்த முடியுமா? இது எப்படி நடந்தது என்று போலீசார் களத்தில் இறங்கினர்.

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் இயங்கும் டெல் நிறுவனத்தின் கடல் மார்க்கமாக கடந்த ஜூலை மாதம் கண்டெய்னரை அனுப்பியுள்ளது. அந்த கப்பல் செப்டம்பர் 7ம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது. ஷாங்காயில் இருந்து சீ ஸ்பேன் (Sea span) என்ற கப்பலில் சுமார் 40 அடி நீளமுள்ள கன்டெய்னரில் டெல் நிறுவனத்தின் 5,230 நோட்புக் எனப்படும் லேப்டாப்கள் அந்த கண்டெய்னரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த லேப்டாப்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள டெல் நிறுவனத்தில் இதை ஒப்படைக்கும் பொறுப்பை டி.பி.ஷென்கர் நிறுவனம் எடுத்திருந்தது.

செப்டம்பர் 7ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்குள் நுழைந்த சீ ஸ்பேன் கப்பல், கன்டெய்னர்களை கையாளும் சி.ஐ.டி.பி.எல்-லின் (சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல்ஸ் பிரைவேட் லிமிடெட்) டெர்மினலில் கன்டெய்னரை இறக்கிவிட்டது.

பின்னர் துறைமுகத்தில் கண்டெய்னரை இடமாற்றம் செய்வதற்கான ரசீதை (Equipments interchange receipt) சி.ஐ.டி.பி.எல் நிறுவன பிரதிநிதிகள் வழங்கிய பிறகே கண்டெய்னர் வெளியில் எடுக்கமுடியும்.

இந்த நிலையில் செப்டம்பர் 8ஆம் தேதியன்று சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்துக்கு டி.பி.ஷென்கர் நிறுவனம், கண்டெய்னரை வெளியே எடுப்பதற்கு சுங்கத்துறைக்கு கட்டணம் செலுத்தியது உள்பட முக்கிய ஆவணங்களை இணைத்து மெயில் அனுப்பியுள்ளது.

ஆனால் போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி டி.பி.ஷென்கர் நிறுவனத்துக்கு சி.ஐ.டி.பி.எல் நிறுவனத்தின் ஆவண சரிபார்ப்பு பிரிவின் ஊழியர்கள் பதில் அனுப்பியுள்ளனர்.

இதை அத்தனையும் சி.ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் ஊழியர் இளவரசன் போதிய ஆவணங்கள் இல்லை என்று நாடகமாடி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 10 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த இளவரசன், கண்டெய்னரை கடத்தி செல்வதற்கு போதிய ஆவணங்களைத் தயாரித்துள்ளார். அதைக் காட்டியே கண்டெய்னரை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டார்.

கண்டெய்னர் கடத்தல் காரர் இளவரசன் கடத்தலுக்கு முன்னதாகப் பல்வேறு ஒத்திகைகளை பார்த்து, கடைசியாக முத்துராஜ், திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், அரசுச் பேருந்து ஓட்டுநர் சங்கரன் உள்பட சிலரை வேலைக்கு அமர்த்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணையில் இறங்கிய துறைமுகம் போலீசார், முதலில் துறைமுகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். திருவெற்றியூரில் இருந்து திருவள்ளூர் மணவாளன் நகரில் ஒதுக்குபுறமாக நின்ற கண்டெய்னரை கண்டுப் பிடித்தனர். அந்த கண்டெய்னரில் ஜி.பி.எஸ். கருவிகள் இருந்ததால் போலீசாருக்கு வேலை சுலபமாக முடிந்தது. போலீசார் கண்டுப் பிடிப்பதற்கு முன்பு இளவரசன் டீம் கண்டெய்னரை உடைத்துள்ளது. அப்போது உள்புறத்திலும் ஜி.பி.எஸ். கருவி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் இறந்த 23 லேப்டாப்களை மட்டும் எடுத்துக் கொண்டு இளவரசன் தப்பியுள்ளார். பின்னர் பேங்ளூரில் வைத்து இளவரசனை கைது செய்துள்ளனர்.

பாதுகாப்பு பலமாக இருந்த துறைமுகத்தில் 35 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு கண்டெய்னரை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ