- Advertisement -
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்
நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி பல்வேறு படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவர் தயாரிக்க உள்ள 6-வது படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் இயக்குனர் யார் என்று ஹீரோ யார் என்று அறிவிக்கப் படவல்லை. மொத்தமாக படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நாளை காலை 10-மணிக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.