Homeசெய்திகள்சினிமாபைக் ரைடுக்கு தயாரான அஜித்..... லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

பைக் ரைடுக்கு தயாரான அஜித்….. லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

-

- Advertisement -

நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. பைக் ரைடுக்கு தயாரான அஜித்..... லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!இதைத்தொடர்ந்து நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏறத்தாழ இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் ஷூட்டிங் இல்லாத சமயங்களில் தனது நண்பர்களுடன் பைக் ரைடு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.பைக் ரைடுக்கு தயாரான அஜித்..... லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!அதன்படி இன்று காலையில் நடிகர் அஜித் பைக் ரைடுக்கு தயாராகி இருக்கிறார். இது தொடர்பான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் ரசிகர்கள் பலரும் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அஜித்தின் கார் ரேஸ் போன்ற அப்டேட்டுகளும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் தருவதாக பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ