தயாரிப்பாளர் முரளிதரன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு என் ராமசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து தேர்தலில் தலைவராக வெற்றி பெற்று சிறப்பாக பணியாற்றிய எல் எம் எம் என்று எல்லோராலும் பிரியமாக அழைக்க பட்டு வந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரருமான திரு. கே. முரளிதரன் அவர்கள் இன்று கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது. அவர் கமலஹாசன் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், அஜித், சூர்யா ஆகியோரை வைத்து அன்பே சிவம், வீரம் வெளஞ்ச மண்ணு, மிஸ்டர்.மெட்ராஸ் கோகுலத்தில் சீதை, அரண்மனை காவலன், வேலுச்சாமி, ப்ரியமுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து ஆகிய மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவரது மறைவு திரையுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்கள்.