spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லை அருகே அரசுப்பேருந்து - மினி லாரி நேருக்கு நேர் மோதல்... ஓட்டுநர் உள்ளிட்ட இருவர்...

நெல்லை அருகே அரசுப்பேருந்து – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் பலி

-

- Advertisement -
kadalkanni

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. நெல்லை மாவட்டம்  மூன்றடைப்பு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே காஞ்சிபுரத்தில் இருந்து காவல்கிணறு இஸ்ரோ மையத்திற்கு பொருட்கள் ஏற்றிவந்த மினிலாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் மினி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி நெல்லை மாவட்டம் படளையார்குளத்தை சேர்ந்த ஒட்டுநர் மகேஷ்(20), அவருடன் பயணித்த முதலைக்குளத்தைச் சேர்ந்த உசிலவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூன்றடைப்பு போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

மேலும் விபத்து தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மினி லாரியை ஓட்டிவந்த மகேஷ் தூக்கத்தில் வலது புறமாக வாகனத்தை இயக்கியதால் விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.

MUST READ