Homeசெய்திகள்தமிழ்நாடுஅவிநாசி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து... கோவையை சேர்ந்த சகோதரிகள் உள்பட...

அவிநாசி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து… கோவையை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பலி!

-

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது கார் மோதிய விபத்தில் கோவை சேர்ந்த சகோதரிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவையை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியம் – மகாலட்சுமி தம்பதியினர். இவர்களது மகள்கள் அபர்ணா, ஹேமா. கல்லூரி மாணவிகளான இவர்கள் இருவரும் நேற்று இரவு பெங்களுருவில் இருந்து கார் மூலம் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை அபர்ணாவின் நண்பரான கோவையை சேர்ந்த மோனிஷ் (28) என்பவர், தனது காரில் அழைத்து வந்துள்ளார்.

இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே சேலம் – கோவை ஆறுவழிச் சாலையில் கார் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மோனிஷ் மற்றும் அபர்ணா, அவரது தங்கை ஹேமா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல்துறையினர், மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ