நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் சீமான் மீது அதிருப்தியில் இருந்து வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சத்தமில்லாமல் இணையபோவதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள போகும் அரசியல் பிரபலங்கள் யார்? சினிமா பிரபலங்கள் யார் என்பதை விஜய் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.
திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளில் இருந்து அதிருப்தியில் ஒதுங்கி இருக்கும் அனுபவம் மிகுந்த தலைவர்களிடம் விஜய் பேசி வருவதாக தகவல் இருக்கிறது.
அதேபோன்று நாம் தமிழர் கட்சியில் பிரபலமான பேச்சாளராக இருந்த காளியம்மாள் கடந்த சில வாரங்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவரைப் போன்று ஏராளமானோர் சீமானின் சர்வதிகார மனோபாவத்தை கண்டித்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.