Homeசெய்திகள்சென்னைதிருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்து

திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்து

-

- Advertisement -

திருவள்ளூர்: புறநகர் ரயில் சேவைகள் ரத்துசென்னை கடற்கரை மற்றும்  எழும்பூர் இடையே 4 ஆவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

இதையடுத்து, சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்திலும் நாளை  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வழித்தடங்களில் மீண்டும் மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி ஷாப்பிங் ஸ்பாட் வண்ணாரப்பேட்டை – குவிந்த வாடிக்கையாளர்கள்

MUST READ