Homeசெய்திகள்தமிழ்நாடு“மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கை.. பெரியார் எங்கள் முதல் கொள்கைத் தலைவர்” - தவெக கொள்கைகள் இதுதான்..!!

“மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கை.. பெரியார் எங்கள் முதல் கொள்கைத் தலைவர்” – தவெக கொள்கைகள் இதுதான்..!!

-

- Advertisement -

 “மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கை.. பெரியார் எங்கள் முதல் கொள்கைத் தலைவர்” - தவெக கொள்கைகள் இதுதான்..!!

விக்கிரவாண்டி வி சாலையில் தவெக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. தவெகா மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் முனைவர் சம்பத்குமார் வெளியிட்டார்.

குறிக்கோள் : மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் தனிமனித சமூக பொருளாதார அரசியல் உரிமைகளை எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவதே குறிக்கோள்.

தவெக கொள்கை

கொள்கைகள் : 

>>மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளுடன் தமிழக வெற்றிக் கழகம் உங்களுக்காக உழைக்கும்.

>> தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான். தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் இருக்கும்; தமிழ்நாட்டில் தமிழ் மொழி தான் ஆட்சி மொழி ; வழக்காடு மொழி மற்றும் வழிபாட்டு மொழி என அறிவிப்பு

>> திருவள்ளுவர் வழியில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் வழியில் தமிழக வெற்றி கழகம் செயல்படும்.

>> தமிழ் மொழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

>>உற்பத்தி திறன், உடல் மற்றும் உள்ள நலன் கெடுக்கும் சமூக சீர்திருத்துக்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத தமிழகம் படைத்தல்.

>>அரசியல் தலைவீடற்ற லஞ்ச லாவண்யம் இல்லாத ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவோம்.

>> வர்ணாசிரம கொள்கைகள் எந்த வகையில் இருந்தாலும் அதை முழுமையாக தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கும்.

>>தீண்டாமை ஒழிப்பு- பழமைவாத பழக்கவழக்கங்கள் ஒழிப்பது தங்களது கட்சியின் முக்கிய கொள்கை

>>ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலம் வரை, அனைத்து பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநித்துவம் வழங்குவதே தவெகவின் சமதர்ம சமூக நீதி.

MUST READ