Homeசெய்திகள்தமிழ்நாடு"காய்த்த மரம் தான் கல்லடி படும்"... நடிகர் விஜய்க்கு, ஆர்.எஸ்.பாரதி பதிலடி

“காய்த்த மரம் தான் கல்லடி படும்”… நடிகர் விஜய்க்கு, ஆர்.எஸ்.பாரதி பதிலடி

-

- Advertisement -

காய்த்த மரம் தான் கல்லடி படும், திமுக மீதான விமர்சனங்களை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுப்போம் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கில் திமுக சட்டத்துறை சார்பில் மறைந்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படத்தினை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

AIADMK, DMK, RS Bharati,

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மீது குற்றம்சாட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சாடினார். மேலும், கலைஞர் குடும்பத்தில் அனைத்து ஆண்களும் ஒரு சமயத்தில் சிறைக்கு சென்றதாகவும், அப்போது கலைஞர், தமது வீட்டில் பெண்கள் மட்டுமே உள்ளதாகவும், ஆண்கள் சிறைக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட தியாகம் செய்தது கலைஞர் குடும்பம் என்றும், இந்த குடும்பத்தை பற்றி சிலர் அவதூறாக பேசுவதாகவும் விஜயை விமர்சித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுக குறித்து ஆளுநரில் இருந்து பல பேர் பேசியுள்ளதாகவும், தங்களுடைய கட்சி ஆலமரத்திற்கு சமமானது என்றும் தெரிவித்தார். காய்த்த மரம் தான் கல்லடி பட வேண்டும், ஆகவே திமுக என்ற இந்த ஆலமரம் என்பது பல பேர் கல்லெறிந்தாலும் தாங்கிக் கொள்கிற சக்தி உள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அத்துடன், விமர்சனங்களை எதிர்கொண்டு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

MUST READ