Homeசெய்திகள்தமிழ்நாடுடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு - 9,491 ஆக உயர்ந்த வேலை...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு – 9,491 ஆக உயர்ந்த வேலை வாய்ப்பு

-

8,932 பேருக்கு வேலை வாய்ப்பு - அரசு அதிரடி நடவடிக்கை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தமிழகத்தில் கடந்த ஜுன் 9 ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வை சுமார் 16 லட்சம் பேர் என தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

தொடர்ந்து குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. பின்னர் இன்னும் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு 8,932 ஆக காலிபணியிடம் அதிகரித்தது. தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேலும் 559 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு  மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.

முதன்முறையாக தேர்வு நடைபெற்று நான்கு மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ