சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் 21 வது படமான இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இதற்கிடையில் பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. மேலும் இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
#AmaranInCoimbatore#Amaran #AmaranOctober31 #AmaranDiwali #MajorMukundVaradarajan#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @Sai_Pallavi92 @gvprakash @anbariv… pic.twitter.com/pxR6l68LuJ
— Raaj Kamal Films International (@RKFI) October 29, 2024
படக்குழுவும் மலேசியா, ஐதராபாத்,கேரளா போன்ற பகுதிகளில் நடைபெறும் ப்ரோமோஷன் பணிகளில் பங்கேற்று வருகின்றனர். அடுத்தது கோயம்புத்தூரில் இதன் ப்ரோமோஷன் பணிகள் நடைபெறுகிறது. இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் பிரைவேட் ஜெட் ஒன்றில் மாஸாக வந்திறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனதுஎக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.